மேம்படுத்த உதவுங்கள் தவறு, சேர்க்க வேண்டியது, மேம்படுத்த வேண்டியது
இந்தத் தளம் தினமும் பார்ப்பவர்களின் கருத்தால்தான் சரியாகிறது. ஒரு தேதி தவறாக இருந்தாலோ, ஒரு பக்கத்தில் ஏதாவது குறைவாக இருந்தாலோ, வேறு எப்படி இருந்தால் பயன்படும் என்று தோன்றினாலோ — இங்கே சொல்லுங்கள். பெயர், மின்னஞ்சல் கட்டாயம் இல்லை; பதில் வேண்டும் என்றால் மட்டும் கொடுங்கள்.
அனுப்பிய பின் என்ன நடக்கும்
ஒரு குறிப்பு: நாள் காட்டி வாக்கிய பஞ்சாங்க முறையில் உள்ளது; திருக்கணிதப் பஞ்சாங்கத்துடனோ செயலியுடனோ ஒப்பிடும்போது திதி, நட்சத்திரம் முடியும் நேரம் சில நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை வேறுபடுவது தவறு அல்ல. அதே வாக்கிய நாள் காட்டியுடன் ஒப்பிட்டு வேறுபாடு இருந்தால் அது நிச்சயம் சொல்ல வேண்டியது.
தவறு என்று வந்த ஒவ்வொரு செய்தியும் இரண்டு வேலை நாட்களுக்குள் பஞ்சாங்க மூலங்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்படும்; தவறு உறுதியானால் அந்தப் பக்கத்திலேயே திருத்தி, "புதுப்பிக்கப்பட்ட நாள்" மாற்றப்படும். சேர்க்க வேண்டியது, மேம்பாடு — இவை பட்டியலில் சேர்க்கப்பட்டு, அடுத்த புதுப்பிப்பில் பார்க்கப்படும். மின்னஞ்சல் கொடுத்திருந்தால் என்ன செய்தோம் என்று பதில் வரும். நீங்கள் கொடுக்கும் விவரம் இதற்கு மட்டும் பயன்படும் — தனியுரிமைக் கொள்கை.
தனிப்பட்ட ஜாதகப் பலன், முகூர்த்த நேரம், பொருத்தம் பார்த்துச் சொல்வது இந்தத் தளத்தின் சேவை அல்ல; அதற்கு உங்கள் குடும்ப ஜோதிடரை அணுகுங்கள். இந்தப் படிவத்தை Sellam Infotech Private Limited (திருச்செங்கோடு) பெற்றுப் பதில் தருகிறது.