Tamil Calendar

sentiment_dissatisfied 404

home முகப்பு பக்கம்

பொறுப்புத் துறப்பு பஞ்சாங்கம், முகூர்த்தம், ஜோதிடம் பற்றி

புதுப்பிக்கப்பட்ட நாள்: 17 October 2026 · Sellam Infotech Private Limited, திருச்செங்கோடு

சுருக்கமாக: இந்தத் தளத்தில் உள்ளவை பொதுத் தகவல்; தனிப்பட்ட ஆலோசனை அல்ல. திருமணம், கிரகப்பிரவேசம், பெரிய முதலீடு போன்ற முடிவுகளுக்கு உங்கள் குடும்ப வழக்கப்படி புரோகிதரையோ ஜோதிடரையோ கலந்து கொள்ளுங்கள்.

1. பஞ்சாங்கத் தரவு

நாள் காட்டியில் உள்ள சூரிய உதயம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவை வாக்கிய பஞ்சாங்க முறையில், சென்னைக்குத் தரப்படுகின்றன; திருக்கணிதப் பஞ்சாங்கங்களில் இவை முடியும் நேரம் சில நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை வேறுபடும் — இரண்டும் வழக்கத்தில் உள்ள முறைகள், ஒன்று தவறு என்று பொருள் அல்ல. ராகு காலம், எமகண்டம், குளிகை நாள் காட்டிகளின் வழக்கமான கிழமை அட்டவணைப்படி. வேறு ஊரில் சூரிய உதயம் சில நிமிடங்கள் மாறும்; அதனால் ஓரை, கௌரி, லக்ன நேரங்களும் மாறும். ஒரு திதி நாளின் நடுவில் தொடங்கி மறுநாள் முடிவதால், எந்த நாளை விரத நாள் என்று எடுப்பது என்பதில் பஞ்சாங்கங்களுக்கு இடையே ஒரு நாள் வேறுபாடு வரலாம்; எங்கள் விதி அந்தந்தப் பக்கத்தில் எழுதப்பட்டிருக்கும்.

2. முகூர்த்தம், நல்ல நாள்

சுப முகூர்த்தம், கிரகப்பிரவேசம், ஆபரணம், வாகனம் வாங்க நல்ல நாள் பட்டியல்கள் எல்லாருக்கும் பொதுவான மரபு விதிகளின்படி தரப்பட்டவை. ஒருவருக்கு உகந்த நாள் அவரின் ஜென்ம நட்சத்திரம், ராசி, லக்னம் ஆகியவற்றைப் பொறுத்து மாறும்; முகூர்த்த நேரம் (லக்னம்) இந்தத் தளத்தில் தரப்படுவதில்லை. ஒரு நாள் பட்டியலில் இருப்பது அந்த நாளில் நடக்கும் நிகழ்வுக்கு உத்தரவாதம் அல்ல.

3. ராசி பலன், ஜோதிடம், மரபு நம்பிக்கைகள்

ராசி பலன், கிரகப் பெயர்ச்சி பலன், கௌரி பஞ்சாங்கம், ஓரை, பல்லி விழும் பலன், வாஸ்து, பொருத்தம் போன்றவை தமிழ் மரபில் தலைமுறைகளாகக் கடைப்பிடிக்கப்படும் நம்பிக்கைகள்; அவை அறிவியல் கணிப்புகள் அல்ல, அவற்றை நாங்கள் அப்படிச் சொல்வதும் இல்லை. ஒரு ராசிக்குச் சொல்லப்படும் பலன் அந்த ராசியில் பிறந்த எல்லோருக்கும் பொதுவானது; தனிப்பட்ட ஜாதகம், தசை, லக்னம் இவற்றால் பலன் மாறும். உடல்நலம், பணம், உறவு, சட்டம் சார்ந்த முடிவுகளை இவற்றை மட்டும் வைத்து எடுக்க வேண்டாம்; தேவையானால் மருத்துவர், நிதி ஆலோசகர், வழக்கறிஞர் போன்ற தகுதியானவர்களை அணுகுங்கள். எந்த ஜோதிடக் குறிப்புக்காகவும் மருத்துவச் சிகிச்சையையோ அவசர உதவியையோ தள்ளிப் போட வேண்டாம்.

ராசி பலனும் பெயர்ச்சி பலனும் திருக்கணித முறையில் கிரக நிலையைப் பார்த்து எழுதப்படுகின்றன; பெயர்ச்சித் தேதி வாக்கியம், திருக்கணிதம் இரண்டும் தனித்தனியாகத் தரப்படும் — இரண்டுக்கும் இடையே சில நாட்கள் வேறுபாடு இயல்பு. பரிகாரங்கள் பொது மரபு வழக்கங்கள் மட்டுமே; எந்த ஜோதிடரையோ கோவிலையோ பொருளையோ இந்தத் தளம் பரிந்துரைப்பதில்லை, பணம் பெற்றுப் பரிகாரம் சொல்வதில்லை.

4. அரசு விடுமுறை, பண்டிகைத் தேதிகள்

அரசு விடுமுறைப் பட்டியல் தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி; அரசு பின்னர் மாற்றினால் அதுவே செல்லும். ரம்ஜான், பக்ரீத், முஹர்ரம் போன்ற பிறை சார்ந்த நாட்கள் பிறை பார்த்தலைப் பொறுத்து மறுநாளுக்கு மாறலாம். பள்ளி, வங்கி, அலுவலக விடுமுறையை அந்தந்த நிறுவனத்திடம் உறுதி செய்யுங்கள்.

5. விளம்பரங்கள்

தளத்தில் காட்டப்படும் விளம்பரங்கள் மூன்றாம் தரப்பு விளம்பர நிறுவனங்களால் தானாகத் தேர்வு செய்யப்படுபவை; அவற்றை நாங்கள் பரிந்துரைப்பதில்லை, அவற்றின் உள்ளடக்கத்துக்குப் பொறுப்பல்ல. ஜோதிடர், கோவில், பொருள் — எதையும் இந்தத் தளம் பரிந்துரைப்பதில்லை.

6. தவறு இருந்தால்

கவனமாகச் சரிபார்த்தாலும் தவறு நேரலாம். கண்டால் தொடர்பு கொள்ள பக்கத்தில் அல்லது support@tamilcalendar.live முகவரிக்குச் சொல்லுங்கள்; சரிபார்த்துத் திருத்துவோம். தளத்தை நடத்துவது: Sellam Infotech Private Limited, 208/174C, செங்கோடம்பாளையம், திருச்செங்கோடு, நாமக்கல் – 637211. இந்தத் தளத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் எந்த இழப்புக்கும் Sellam Infotech Private Limited பொறுப்பல்ல என்பது பயன்பாட்டு விதிமுறைகளில் உள்ளது.

English

Everything on this site is general information published by Sellam Infotech Private Limited, Tiruchengode, Tamil Nadu. The daily calendar follows the Vaakya panchangam for Chennai, so thithi and nakshatram end times differ from Thirukkanitham (drik) panchangams by minutes up to about an hour — both are accepted systems; rasi palan and transit pages use Thirukkanitham planetary positions and show both transit dates; viratham and festival dates can differ by a day between traditions; government holiday lists follow official notifications and may change. Rasi palan, planetary transits, gowri panchangam, horai, vastu and similar content are traditional beliefs, not scientific predictions, and are written for a whole rasi, not for an individual. Do not base health, financial, legal or relationship decisions on them alone, and never delay medical or emergency care because of an astrological note. Advertisements are selected automatically by third-party ad networks and are not our recommendations. Report errors at https://vetricalendar.com/contact or support@tamilcalendar.live.